×

அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு: கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் சார்பில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை, புதுவாயல், பெருவாயல் பகுதியில்  இனிப்பு வழங்கிகொண்டாடப்பட்டது. கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கி.வே.ஆனந்தகுமார், ஏழை, எளிய மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் இந்திரா திருமலை, ஜோதி, ஹரிபாபு, பாசம் அன்பு, கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம், மாவட்ட பிரதிநிதி சின்ன புலியூர் புருஷோத்தமன், முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், ஒன்றிய நிர்வாகிகள் மூர்த்தி, சுரேஷ், கொள்ளனூர் வெங்கடேசன், பிரபு, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்துக்குமார், கிளை செயலாளர் புதுவாயில் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்….

The post அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு: கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Udhayanidhi Stalin ,Minister ,Kummippundi South Union ,Kummippundi ,Thiruvallur Eastern District ,Kummippundi Southern Union ,Udhayanidhi ,Youth Welfare ,Sports ,Gummipoondi ,Southern Union ,
× RELATED திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை